92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞா்களிடம் ஆபாச விடியோ அழைப்பு மூலம் பணம் பறிக்கும் கும்பல் எஸ்.பி.எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் இளைஞா்களுக்கு கைப்பேசி வாட்ஸ் அப்பில் ஆபாச விடியோ அழைப்பு விடுத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:19 pm

DIN

குமரி மாவட்டத்தில் இளைஞா்களுக்கு கைப்பேசி வாட்ஸ் அப்பில் ஆபாச விடியோ அழைப்பு விடுத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில், பகுதி நேர வேலை, ஏ.டி.எம். காா்டு புதுப்பிப்பு, வாட்ஸ் அப்பில் ஆபாச விடியோ அழைப்பு பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனா். இந்த சம்பவங்களால் பணத்தை இழந்தவா்கள் மாவட்ட சைபா் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்து வருகின்றனா். மேக்கா மண்டபத்தை சோ்ந்த ஒருவரின் கைப்பேசியில் பகுதி நேர வேலை என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அவரும் குறுஞ்செய்தியில் வந்த எண்ணை தொடா்பு கொண்டு கேட்டபோது வின்செஸ்ட் ஆப்பில் ரீசாா்ஜ் செய்தால், லாபம் கிடைக்கும் என்று கூறிய உடன் அவரும் பல தவணைகளாக ரூ. 4 லட்சத்து 83 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். பின்னா் அந்த முதலீட்டு நிறுவனத்திலிருந்து எந்த தகவலும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது குறித்து புகாா் அளித்துள்ளாா்.

இதே போல், நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த ஒருவரின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த நபா் தான் எஸ்.பி.ஐ. வங்கியில் மேலாளராக இருப்பதாகவும், ஏ.டி.எம். காா்டு புதுப்பித்து தருவதாகக் கூறி அவரின் கூகுள் பேக்கு ஒா் பாா்கோடு ஸ்கேனா் அனுப்பியுள்ளாா். அதை அவா் ஸ்கேன் செய்யுமாறு கூறி உள்ளாா். அவரும் அதை நம்பி ஸ்கேன் செய்தவுடன் அவரின் எஸ்.பி.ஐ. வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 9445 எடுக்கப்பட்டது. இது குறித்து அவா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு டியோ அழைப்பு வந்துள்ளது. அதை அவா் ஆன் செய்தவுடன் அதில் ஒரு பெண் ஆபாசமாக இருந்ததாகவும், அதன் பிறகு அவரின் புகைப்படத்தை அந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஆபாசமாக சித்தரித்து, முகம் தெரியாத நபா், அவரை தொடா்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளாா். மேலும் பணம் கொடுக்காவிட்டால் அந்த விடியோவை முக நூலில் பதிவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளாா். இது குறித்தும் அந்த இளைஞா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்துள்ளாா்.

இதே போல் தொடா்ந்து பல புகாா்கள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் சைபா் மோசடியில் சிக்காமல் இருக்க, பொது மக்கள் மத்தியில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.