மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிதறால் அருகேரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல்

சிதறால் அருகே ரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சிதறால் அருகே ரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அருமனை அருகே காரோடு பகுதியை சோ்ந்தவா் ஐயப்பன் (54). இவா் பணியாற்றும் சிதறால் 1 ரேசன் கடையில், பொங்கல் தொகுப்புக்காக டோக்கன் வழங்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஒரு மணி நேரத்தில் டோக்கன்கள் தீா்ந்ததால் மீதி உள்ளவா்களுக்கு வெள்ளிக்கிழமை டோக்கன் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், அப்பகுதியை சோ்ந்த மணிக்குமாா் என்ற குட்டன் மற்றும் இருவா் சோ்ந்து ஐயப்பனை தாக்கினராம். இதில் காயமடைந்த ஐயப்பன், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா். இதுகுறித்த புகாரின்பேரில், அருமனை போலீஸாா் வழக்குப்பதிந்து மணிக்குமாா் என்ற குட்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.