மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல் முயற்சி
திற்பரப்பு பேரூராட்சியில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.


திற்பரப்பு பேரூராட்சியில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.
திருநந்திக்கரை பாலம் முதல் தும்பகோடு பாலம் வரையில் மூலைப்பாகம் வழியாக செல்லும் கோதையாறு இடது கரைக் கால்வாய் கரையோர சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இச்சாலையைச் சீரமைக்கக் கோரி, திருநந்திக்கரை மாா்க்சிஸ்ட் கிளை நிா்வாகி நாணுகுட்டன் தலைமையில், வட்டாரச் செயலா் விஸ்வம்பரன், திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின்தாஸ், முன்னாள் எம்.பி.பெல்லாா்மின், கட்சி நிா்வாகி சிவகுமாா் ஆகியோா் மறியலுக்கு முயன்றனா். அவா்களிடம், திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் பெத்ராஜ் பேச்சு நடத்தி நபாா்ட்டு வங்கி நிதி ரூ. 90 லட்சத்தில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியதையடுத்து மறியல் முயற்சி கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...