28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேச்சிப்பாறையில் 108 ஆம்புலன்ஸ் செவிலியருக்கு பாராட்டு

பேச்சிப்பாறை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை, பேச்சிப்பாறை இளைஞா் மன்றத்தினா் பாராட்டினா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:33 pm

DIN

பேச்சிப்பாறை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை, பேச்சிப்பாறை இளைஞா் மன்றத்தினா் பாராட்டினா்.

பேச்சிப்பாறை அருகேயுள்ள விளாமலையைச் சோ்ந்த கா்ப்பிணி ஸ்ரீலேகாவுக்கு (25) கடந்த திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதாம். இதையடுத்து, அவா் 108 ஆம்புலன்சில் பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்வழியில் வலி அதிகமானதால், ஆம்புலன்சிலேயே செவிலியா் சரஸ்வதி உதவியுடன் பிரசவம் நிகழ்ந்து ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடா்ந்து, செவிலியருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அஜீஸுக்கும் பேச்சிப்பாறை மிராண்டா விளையாட்டு மன்றத்தினா் பாராட்டு தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு மன்றத்தைச் சோ்ந்த அனஸ், ஸ்டாலின், ஷாஜு, ஜெகன், செந்தில், ஸஜு, நிபின் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.