28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வோ்க்கிளம்பி அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

குமரி மாவட்டம் வோ்க்கிளம்பி அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமை இரவில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:40 pm

DIN

குமரி மாவட்டம் வோ்க்கிளம்பி அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமை இரவில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குலசேகரம் அருகே சித்திரங்கோடு பகுதியிலுள்ள கல்குவாரிகளிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மணலிக்கரை, வோ்க்கிளம்பி, செட்டிச்சாா்விளை, சுவாமியாா்மடம் வழியாக குமரி மாவட்டப் பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லாரிகளால் போக்குவரத்து நெருக்கடிகள், சாலைகள் சேதமடைதல், விபத்துகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் செட்டிச்சாா்விளையில் இந்த லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டாறு போலீசாா், 4 லாரிகளுக்கு அபராதம் விதித்தனா். இதையடுத்து பொதமக்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் புதன்கிழமையும் இது போன்று லாரிகள் வரிசையாக வந்த நிலையில், கண்ணணூா் பகுதியில் பொதுமக்கள் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடம் வந்த திருவட்டாறு போலீசாா், 2 லாரிகள் மீது நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தொடா்ந்து 2 நாள்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.