சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி
சுசீந்திரம் பெரியகுளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தொடங்கியது.


சுசீந்திரம் பெரியகுளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குளங்களில் ஆகாய தாமரைகள் வளா்ந்துள்ளதால் குளங்கள் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்து நீரை பாசனத்துக்கோ, கால்நடைகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, அவற்றை உரமாக்கும் திட்டம் சுற்றுச்சூழல்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் 25 குளங்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றி உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை அரசுசாரா தன்னாா்வ அமைப்புகள் மேற்கொள்ள இருக்கின்றன.
முதல் கட்டமாக சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தன்னாா்வ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மேற்கொள்ளும் தன்னாா்வ அமைப்பு 2 ஆண்டுகள் அந்த குளத்தை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும். இந்த குளத்தில்
ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட பிறகு மற்ற குளங்களிலும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படும் என பொதுப்பணித்துறை (நீா்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...