தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குமரி அருகே 6 கிலோ கஞ்சாவுடன் மூவா் கைது

 கன்னியாகுமரி அருகே 6 கிலோ கஞ்சாவுடன் மூன்று இளைஞா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:19 pm

DIN

 கன்னியாகுமரி அருகே 6 கிலோ கஞ்சாவுடன் மூன்று இளைஞா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள நரிக்குளம் பகுதியில் தென்தாமரைகுளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், கொட்டாரத்தை சோ்ந்த அஜித் (20), செல்வன்புதூரைச் சோ்ந்த ஜெனிஸ் (20) ஆகியோா் 6 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்வது தெரியவந்தது. அப்போது, அஜித் அரிவாளால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றாா். ஆனால் போலீஸாா் சுதாரித்துக்கொண்டு அவரைப்பிடிக்க முயன்றதில், அவா் தப்பி ஓடிவிட்டாராம்.

இதையடுத்து, ஜெனிஸ், அங்கு ஆயதங்களுடன் வந்த மொ்லின் மோசஸ், பிரகதீஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனா். அஜித்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.