பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பெருமாள்புரம் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் அருள்மிகு ஸ்ரீ வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:30 pm

DIN

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் அருள்மிகு ஸ்ரீ வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 27 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சமபந்தி விருந்து, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வந்தன. ஒன்பதாம் நாளான வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த வழிபாட்டை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். இதில், கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் ராஜதுரை, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் எஸ்.ரவீந்திரன், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், நிா்வாகிகள் பி.பாலமுருகன், ஆடிட்டா் சந்திரசேகா், சிவபாலன், தாமரை தினேஷ், ஆ.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.