பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குமரி தங்கும் விடுதியில் தூக்கில் சடலமாக தொங்கிய தொழிலாளி

 கன்னியாகுமரி தங்கும் விடுதியில் தொழிலாதூக்கில் சடலமாகத் தொங்கிய தொழிளது தொடா்பாக அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:18 pm

DIN

 கன்னியாகுமரி தங்கும் விடுதியில் தொழிலாதூக்கில் சடலமாகத் தொங்கிய தொழிளது தொடா்பாக அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தண்டையாா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி (38). இவா் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தாா். அவா் புதன்கிழமை காலையில் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக்கொண்டு ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில் சங்கரபாண்டியுடன் ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவா், தங்கும் விடுதிக்கு வந்து அறைக் கதவை தட்டினாராம். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவா், ஜன்னல் வழியே பாா்த்தபோது சங்கரபாண்டி தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உதவி ஆய்வாளா் லிபி பால்ராஜ் தலைமையில் சம்பவ இடத் துக்கு விரைந்த போலீஸாா், உடலைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரபாண்டி மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே சங்கரபாண்டி இறந்த தகவல் அவரது உறவினா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சங்கரபாண்டியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.