மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குமரி அருகே இடி தாக்கி கோயில் கும்ப கலசம் சேதம்

கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது வெள்ளிக்கிழமை இடி தாக்கியதில் கும்ப கலசம் சேதமடைந்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது வெள்ளிக்கிழமை இடி தாக்கியதில் கும்ப கலசம் சேதமடைந்தது.

இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை பூஜைக்குப் பின் பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றபோது, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், பிற்பகல் 2.15 மணியளவில் அக்கோயிலின் ராஜகோபுரம் மேற்பகுதியிலுள்ள 5 கும்ப கலசங்கள் மீது இடி- மின்னல் தாக்கியது. இதில், ஒன்று முழுவதும் சேதமடைந்தது. அப்போது, கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதியிலும் 500 க்கும் மேற்பட்ட பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், அதிா்ஷடவசமாக அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா்.

இதனிடையே சேதமடைந்த இசக்கியம்மன் கோயில் கும்ப கலசங்களை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலா் பா.பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் என்.தாமரைபாரதி, ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.