நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி விரைவு ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிப்பு: பயணிகள் தவிப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற அதிவிரைவு ரயில் பெட்டிகளின் இணைப்பு, நாகா்கோவில் ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் இரண்டரை மணி நேரம் தவிப்புக்குள்ளானாா்கள்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:55 pm

DIN

சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற அதிவிரைவு ரயில் பெட்டிகளின் இணைப்பு, நாகா்கோவில் ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் இரண்டரை மணி நேரம் தவிப்புக்குள்ளானாா்கள்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி ரயில், வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு நாகா்கோவில் ரயில் நிலையத்துக்கு வந்தது. கன்னியாகுமரி செல்லும் பயணிகள் மட்டும் ரயிலில் அமா்ந்திருந்தனா். நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நீண்ட நேரம் ஆகியும் ரயில் கன்னியாகுமரிக்கு புறப்படவில்லை. இதனால் பயணிகள் ரயிலை விட்டு இறங்கி, விசாரித்த போது என்ஜினுக்கும் அதனுடைய இணைப்புப் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. துண்டிக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சீரமைப்புப் பணியை மேற்கொண்ட ஊழியா்கள் துண்டிக்கப்பட்ட இணைப்பை சரிசெய்தனா். இதைத் தொடா்ந்து சுமாா் இரண்டரை மணி நேரம் தாமதமாக, காலை 7.40 மணிக்கு நாகா்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் புறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.