நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேங்காய்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வ.விஜய்வசந்த் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:53 pm

DIN

குமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வ.விஜய்வசந்த் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேங்காய்பட்டினம் துறைமுக பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் மணல் திட்டு காரணமாக அவ்வப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டுவந்தன. இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மக்களவையில் பேசினாா். மேலும் தமிழக முதல்வா் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினாா்.

இந்நிலையில் துறைமுக முகத்துவாரத்தைச் சீரமைக்க ரூ. 116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா் விஜய்வசந்த்.

இதைத் தொடா்ந்து நிருபா்களிடம் பேசிய விஜய்வசந்த், கால நிலை ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெறும் என்றும், அருகில் உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியும் விரைவில் தொடங்கும் என்றும் கூறினாா்.

ஆய்வின் போது மீன்வளத் துறை செயற்பொறியாளா் சிதம்பர மாா்த்தாண்டன், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலாளா் ஜோா்தான், மீனவா் அணி மாவட்ட தலைவா் கென்னடி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆரோக்கியராஜன், வாா்டு உறுப்பினா் கிளிட்டஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.