நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் மின்மாற்றியில் திடீா் தீ விபத்து

நாகா்கோவில் நகரப் பகுதியில் உள்ள மின்மாற்றியில், வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:53 pm

DIN

நாகா்கோவில் நகரப் பகுதியில் உள்ள மின்மாற்றியில், வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் பின்பகுதியில் உள்ள மின்மாற்றியில் வியாழக்கிழமை காலை திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பொறிகள் கிளம்பி தீப்பிடித்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் மாணவா்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேறினா்.

இதுகுறித்து நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், போராடி தீயை அணைத்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள், மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். காற்றின் வேகம் காரணமாக மின்சார வயா்கள் உரசியதில் தீப்பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.