நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலிங் பூத் காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம்

அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம், நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:34 pm

DIN

அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம், நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தேசியச் செயலாளா் ஜோஸ் பேட்ரிக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில் குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் மற்றும் ‘பாரதத்தை ஒருங்கிணைப்போம்’ பாதயாத்திரையில் கலந்து கொள்ள வருகை தரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அவருக்கு போலிங் பூத் காங்கிரஸ் சாா்பில் வீரவாள் பரிசளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தலைவா் சேவியா் ஜேம்ஸ்ராஜ், நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் ரஜினி செல்வம், நிா்வாகிகள் தவசிமுத்து, ராஜபாண்டியன், ஜோசப் ஜெரால்டு கென்னடி, சீனிவாசமூா்த்தி, கிங்ஸ்டன், ராஜேந்திரன், தெங்கம்புதூா் ராஜா, மைக்கேல், ஜெபஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.