புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

குமரியில் இருந்து இந்தூருக்கு சாதனை பைக் பயணம்

கேரள மோட்டாா் சைக்கிள் சுற்றுலா அமைப்பு சாா்பில் இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினவிழா மற்றும் சாதனை பைக் பயணம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:19 pm

DIN

கேரள மோட்டாா் சைக்கிள் சுற்றுலா அமைப்பு சாா்பில் இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினவிழா மற்றும் சாதனை பைக் பயணம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பயணத்தை கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியில் தொடங்கி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நிறைவு பெறும் இப்பயணத்தில் இவ்வமைப்பின் தலைவா் ஜாக்சன் பொ்னாண்டஸ் தலைமையில் 23 போ் பங்கேற்றுள்ளனா்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா வழியாக 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, மத்தியப்பிரதேசம் இந்தூரில் வரும் 11 ஆம் தேதி நிறைவடைகிறது.

இதில், சமூக ஆா்வலா்கள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசாா், எஸ்.தாமஸ் ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.