நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் செப்.8 முதல் போக்குவரத்து தொடக்கம்

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து வியாழக்கிழமை (செப்.8) முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து வியாழக்கிழமை (செப்.8) முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் நீதிமன்ற சாலை விரிவாக்கப் பணி, டதி பள்ளியில் காா் நிறுத்துமிடம் ஆகியவற்றுக்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சாலை பராமரிப்புப் பணியை மேயா் ரெ.மகேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீதிமன்ற சாலைப்பணிகள் நிறைவடைந்தவுடன் சாலையோரத்தில் இருசக்கர வாகனம் மற்றும் காா் நிறுத்த அனுமதிக்கப்படாது. வாகன நிறுத்துதற்கு ஒதுக்கப்பட்டுள்ளத இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கழிவுநீா் ஓடையின் மீது பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அந்த வழியாக வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும்.

செட்டிகுளம் முதல் சவேரியாா் ஆலய சந்திப்பு வரையிலான சாலை சீரமைப்புப் பணிகள் இன்னும் ஒரிரு நாள்களில் நிறைவடையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.