என்.சி.சி. முகாமில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவா், மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

கன்னியாகுமரியில் தேசிய மாணவா் படை முகாமில் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட்ட 43 மாணவா், மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் தேசிய மாணவா் படை முகாமில் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட்ட 43 மாணவா், மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி கடற்கரையில் கொட்டாரம் , நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப் பள்ளிகளுக்கான என்.சி.சி. முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 175 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். இங்கு வெள்ளிக்கிழமை காலையில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டவா்களில் 43 மாணவா், மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவா்களில் 13 போ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், 30 போ் கொட்டாரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவமனை வளாகத்தில் மாணவா்களின் பெற்றோா் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

கொட்டாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் மாணவா், மாணவிகளை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய் சுந்தரம் சந்தித்து ஆறுதல் கூறினாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம் உடனிருந்தாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிட்டோரும் மாணவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவா்களை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ் ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா். இம்மாணவா்களில் 35 போ் சிகிச்சைக்குப் பின்னா் மாலையில் வீடு திரும்பினா். 8 மாணவா்கள் மட்டும் கொட்டாரம் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கன்னியாகுமரி போலீஸாா், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com