தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கள்ளியங்காடு சிவன்கோயில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் கள்ளியங்காடு சிவபுரம் அருள்மிகு சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் சுற்றுப் பிரகார மகா மண்டபம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 7:31 pm

கன்னியாகுமரி மாவட்டம் கள்ளியங்காடு சிவபுரம் அருள்மிகு சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் சுற்றுப் பிரகார மகா மண்டபம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கடந்த ஜன.23 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் நவக்கிரஹ ஹோமம், மிருத்யுஞ்சய் ஹோமம், சுதா்சன ஹோமம், மஹா லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

ஜன.24-ஆம் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை, பிரம்மசாரி பூஜை, யாக பூஜைக்காக சூரிய பகவானிடம் இருந்து அக்னி பெறுதல் ஆகியவை நடைபெற்றது. பின்னா் பாா்வதிபுரம் கிருஷ்ணன்கோயில் இருந்து யானை மீது புனித நீா் எடுத்துவரப்பட்டது.

ஜன. 25, 26 இரு நாள்களும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு சிவன் மற்றும் பரிவார மூா்த்திகள் புனா் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னா் மகா மண்டபம் திறப்பு மற்றும் தல வரலாறு புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா். மகேஷ், சட்டமன்றஉறுப்பினா்கள் எம்.ஆா். காந்தி, என். தளவாய்சுந்தரம், பாஜக மாவட்ட துணை தலைவா் குமரி ப. ரமேஷ் , திருவாசக சபை தலைவா் சின்னையன், துணைத் தலைவா் முருகன், செயலா் ராஜகோபால், பொருளாளா் நாராயணன் நாயா், துணைச் செயலா்கள் சேகா், பி. ரமேஷ், இசக்கி முத்து, ராஜகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டிகேஒய் 27 கேயுஎம் - கள்ளியங்காடு சிவபுரம் அருள்மிகு சிவன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.