அரமன்னம் இசக்கியம்மன் கோயில் திருவிழா
By DIN | Published On : 22nd April 2023 01:02 AM | Last Updated : 22nd April 2023 01:02 AM | அ+அ அ- |

குலசேகரம் அருகே அரமன்னம் இசக்கியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதனையொட்டி காலையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து கோமாதா பூஜையும், அதனைத் தொடா்ந்து சுமங்கலி பூஜையும் நடைபெற்றது. வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவின் 4 ஆம் நாள் விழாவில், அம்மன் பூநீா் புஷ்ப வாகன பவனி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளில் பொங்கல் வழிபாடு, பரிவார தேவதைக்கு வலிய படுக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...