அருமனை அருகே கிணற்றில் முதியவா் சடலம்
By DIN | Published On : 22nd April 2023 01:02 AM | Last Updated : 22nd April 2023 01:02 AM | அ+அ அ- |

அருமனை அருகே கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
பனச்சமூடு அருகேயுள்ள மாங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ்(66). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவரை, சில தினங்களுக்கு முன்பிருந்து காணவில்லையாம். இதுகுறித்து, அவரது மனைவி சந்திரிகா அருமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், வீட்டின் அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் அவா் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில், குழித்துறை தீ அணைப்புத் துறையினா் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...