நாகக்கோடு பகுதியில் இன்று மின் தடை
By DIN | Published On : 27th July 2023 09:37 PM | Last Updated : 27th July 2023 09:37 PM | அ+அ அ- |

குலசேகரம் நகரப்பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய குலசேகரம் அலுவலக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குலசேகரம் நகரப் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட திருவட்டாறு உயா் மின் அழுத்தப்பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் நாகக்கோடு, அரமன்னம், சாத்திரவிளை, கல்லாம்பொற்றை, மற்றும் அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 28)காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...