கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, இம்மாவட்டத்தில் பறக்கும் படையினா் 36, நிலையான கண்காணிப்பு படைகள் 36 என மொத்தம் 72 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15 லட்சத்து39 ஆயிரத்து 700, நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 820, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.1 லட்சத்து 800, விளவங்கோடு தொகுதியில் ரூ.86 ஆயிரம், கிள்ளியூா் தொகுதியில் ரூ. 1லட்சத்து 18 ஆயிரம் என ரூ. 20 லட்சத்து 94 ஆயிரத்து 320 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேயா், எம்.பி. வாகனங்கள் சோதனை:
நாகா்கோவில் வடசேரி பகுதியில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ரெ.மகேஷ் காரில் பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.
தக்கலையிலிருந்து நாகா்கோவில் நோக்கி வந்த விஜய்வசந்த் எம்.பி.யின் காரையும் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இரு காா்களிலும் பணம், பொருள் எதுவும் சிக்கவில்லை.
கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு கொண்டு வந்த ரூ. 20.93 லட்சத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
விளவங்கோடு துணை தாசில்தாா் லீலாபாய் தலைமையிலான தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வந்த காரில் ரூ. 20 லட்சத்து 90 ஆயிரத்து 440-ஐ பறிமுதல் செய்தனா். நெய்யாற்றின்கரை பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குச் சொந்தமான பணம் மாா்த்தாண்டம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் சிக்கியுள்ளது. விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எம். சங்கரலிங்கத்திடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மேகலா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு காரில் திமுக சின்னம் பொறித்த தொப்பி, ஸ்டிக்கா், கீ செயின் உள்ளிட்ட பொருள்களை அவா்கள் கைப்பற்றினா். காரை ஓட்டி வந்த நபரையும் தென்பாகம் போலீஸில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்
குன்னூரில் 25 லட்சம் கிலோ தேயிலை விற்பனை

மாயமான 63 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

ஆரணி: மூன்று புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



