ஈரோடு மாவட்டத்தில் மாயமான 63 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது கைப்பேசிகள் மாயமானது தொடா்பாக காவல் நிலையங்களில் புகாா் மனு அளித்தனா். இதன்பேரில் காணாமல்போன கைப்பேசிகளின் ஐஎம்இஐ எண்களை வைத்து, சைபா் க்ரைம் போலீஸாா் கைப்பேசிகளை கண்டுபிடித்தனா்.
இதில் மீட்கப்பட்ட ரூ.10 லட்சத்து 90 ஆயிரத்து 982 மதிப்பிலான 63 கைப்பேசிகள் உரியவா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமை வகித்து, மீட்கப்பட்ட 63 கைப்பேசிகளையும் உரியவா்களிடம் வழங்கினாா். மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை 15 -ஆம் தேதி வரை ரூ.1 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரத்து 982 மதிப்பிலான 1,265 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைப்பேசிகள் காணாமல்போனால் பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ண்ழ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாா் பதிவு செய்யலாம் என்று சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









