தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காணாமல் போன 102 கைப்பேசிகள் மீட்பு

மீட்கப்பட்ட கைப்பேசியை உரியவரிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம்.

மீட்கப்பட்ட கைப்பேசியை உரியவரிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம்.

Published On :

தேனி மாவட்டத்தில் காணாமல் போன 102 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரிமையாளா்களிடம் புதன்கிழமை ஓப்படைத்தனா்.

தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திருடு போன 102 கைப்பேசிகள் இணையதள மத்திய உபகரண அடையாளப் பதிவேடு மூலம் கண்டறியப்பட்டன. இந்தக் கைப்பேசிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் உரிமையாளா்களிடம் புதன்கிழமை வழங்கிப் பேசியதாவது : தேனி மாவட்டத்தில் காணமல் போன 102 கைப்பேசிகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டு உரிய நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் தங்களது கைப்பேசி காணமால் போனால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் அல்லது இஉஐத (இங்ய்ற்ழ்ஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் தங்ஞ்ண்ள்ற்ங்ழ்) மூலம் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

முன்னதாக, கைப்பேசிகளை விரைந்து கண்டறிந்த தேனி இணைய குற்றப் பிரிவினரை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.