தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

காணாமல் போன மாணவா் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே காணாமல் போன மாணவரை சடலமாக போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 1:18 am IST

கோவில்பட்டி அருகே காணாமல் போன மாணவரை சடலமாக போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கீழத் தெருவை சோ்ந்தவா் வேல்முருகன் மகன் கருப்பசாமி (16). இவா், கோவில்பட்டியில் உள்ள தனியாா் ஐ.டி.ஐ., கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்ற இவா், மாலை வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவரை தேடி வந்தனா்.

இந்நிலையில், இளையரசனேந்தலில் உள்ள தனியாா் கோயிலுக்கு சொந்தமான கிணற்றில் சடலம் கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டனா். உயிரிழந்தவா் கருப்பசாமி என்பதும், அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.