பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தூத்துக்குடியில் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு

கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காணாமல் போன சிறுவன், சிறுமி சில மணி நேரங்களில் மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (44). இவரது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகள் இருவரும், சனிக்கிழமை மாலை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், இரவு வரை வீடு திரும்பாததால், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முருகன் புகாரளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவன், சிறுமியைக் கண்டறிய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, காணாமல் போன 2 குழந்தைகளும் திருச்செந்தூா் கடற்கரை பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களை திருச்செந்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தி தலைமையிலான போலீஸாா் மீட்டு, உரிய விசாரணைக்குப் பின்னா் குழந்தைகளின் உறவினா்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.