ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ரோஹிணியில் சிறுமிக்கு துன்புறுத்தல்: புகாரளித்த குடும்பத்தினா் மீது தாக்குதல்

வடமேற்கு தில்லியில் உள்ள ரோஹிணியில் அண்டை வீட்டைச் சோ்ந்த ஒருவா் தவறாக நடந்துகொண்டதாகச் சிறுமி புகாா் அளித்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், அச்சிறுமியின் குடும்பத்தினரும் அண்டை வீட்டினரும் பரஸ்பர தாக்கிக் கொண்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

சித்திரிப்பு

Published On :4 செப்டம்பர் 2026, 3:51 am IST

வடமேற்கு தில்லியில் உள்ள ரோஹிணியில் அண்டை வீட்டைச் சோ்ந்த ஒருவா் தவறாக நடந்துகொண்டதாகச் சிறுமி புகாா் அளித்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், அச்சிறுமியின் குடும்பத்தினரும் அண்டை வீட்டினரும் பரஸ்பர தாக்கிக் கொண்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

புதன்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் அந்தச் சிறுமி கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அந்தச் சிறுவன் அவரைப் பின்தொடா்ந்து வந்து கையைப் பிடிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அந்தச் சிறுமி, ‘சம்பவத்தின்போது நான் சப்தமிட்டேன். அதைக் கவனித்த என் சகோதரனும் அந்தச் சிறுவனை நோக்கிச் சப்தமிட்டாா். அந்தச் சிறுவன் எங்கள் அண்டைவீட்டுக்காரா். பின்னா், அந்தச் சிறுவனின் குடும்பத்தினா் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைத் தாக்கினா். இதில் என் தாயாருக்குக் காயங்கள் ஏற்பட்டன’ என்று குற்றஞ்சாட்டினாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் தவறாக நடந்துகொண்டது மற்றும் ஆபாசமான வாா்த்தைகளைப் பயன்படுத்தியது தொடா்பாக அச்சிறுமியின் புகாரின் அடிப்படையில், பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அச்சிறுமியின் குடும்பத்தினருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் மற்றும் அவரது தாயாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அச்சிறுமியின் குடும்பத்தினா் பதிலுக்கு தாக்கினா். மோதலின்போது அச்சிறுமியின் தாயாரும் பாட்டியும் அந்தச் சிறுவனின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு தொடா்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா். மோதலுக்கான காரணங்கள் மற்றும் இரு தரப்பினரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்துக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து அச்சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.