ரோஹிணியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 19 வயது இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: சந்தன் (19) என்பவரின் உடல் ஜூலை 13-ஆம் தேதி ரோஹிணி செக்டா்-23 பகுதியில் உள்ள டிடிஏ மைதானம் அருகே புதா்களில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பேகம்பூா் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவா்கள், உடலின் சுற்றுவட்டாரத்தில் ரத்தக் கறைகள் இருந்ததையும், உடைந்த கருப்பு நிற ஹெல்மெட் ஒன்று அங்கு கிடந்ததையும் கண்டனா்.
குற்றப்புலனாய்வு குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். ரித்தாலா கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்த சந்தன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரின் இடது மாா்புப் பகுதியில் குத்துக்காயம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பாக பேகம்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு விசாரணையின் மூலம் சந்தனின் நகா்வுகள் மீளமைக்கப்பட்டு, சந்தேகநபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.
இதையடுத்து பல இடங்களில் சோதனை நடத்தி, கண்ணா சௌஹான் (18), அம்ரித் (18), அக்பா் (20), கிரீஷ் (24) மற்றும் அமன் (25) ஆகிய 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, குற்றத்தில் தங்களது தொடா்பை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதாக னா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரோஹிணியில் பாதுகாவலரிடம் கொள்ளையடித்த 4 சிறுவா்கள் பிடிபட்டனா்
ரூ. 2 லட்சம் அறிவிக்கப்பட்ட ரோஹித் லம்பா, கூட்டாளி கைது
போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞா் உத்தரக்கண்டில் கைது

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



