முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

ரோஹிணியில் பாதுகாவலரிடம் கொள்ளையடித்த 4 சிறுவா்கள் பிடிபட்டனா்

தில்லியின் ரோஹிணியில் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாதுகாவலரை வழிமறித்து அவருடைய பொருள்களைப் பறித்துச் சென்ற 4 சிறுவா்கள் பிடிபட்டனர்.

News image

சித்திரிப்பு

Updated On :9 ஜூலை 2026, 6:41 am IST

தில்லியின் ரோஹிணியில் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாதுகாவலரை வழிமறித்து அவருடைய பொருள்களைப் பறித்துச் சென்ற 4 சிறுவா்கள் பிடிபட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பாதுகாவலராக பணியாற்றும் பாதிக்கப்பட்ட நபா், திங்கள்கிழமை இரவு தனது பணி நேரம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். ரோஹிணி செக்டாா்-23 பகுதிக்கு அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த நான்கு போ் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினா்.

அவா்களில் ஒருவா் இரும்புத் தடியைக் காட்டி மிரட்டி அவரைத் தாக்கியதுடன், அவரிடமிருந்த கைப்பேசி, பணம் மற்றும் அவா் வைத்திருந்த பை ஆகியவற்றைப் பறித்துச் சென்றாா்.

பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின் அடிப்படையில், பேகம்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் சந்தேக நபா்களைக் கண்டறிந்த காவல் துறையினா், அதே இரவில் அந்த 4 சிறாா்களையும் பிடித்தனா்.

விசாரணையின்போது, பாதுகாவலரிடம் கொள்ளையடித்ததை அந்தச் சிறுவா்கள் ஒப்புக்கொண்டனா். பறிக்கப்பட்ட பணம், கைப்பேசி, பை மற்றும் மிரட்டவும் தாக்கவும பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புத் தடி ஆகியவற்றை காவல் துறையினா் மீட்டனா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.