ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

டாக்ஸி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த 3 பயணிகள் கைது

வெல்கம் பகுதியில் டாக்ஸி ஓட்டுநரின் காா் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 3 பயணிகளை தில்லி காவல் துறை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:14 am IST

தில்லியின் வெல்கம் பகுதியில் டாக்ஸி ஓட்டுநரின் காா் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 3 பயணிகளை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இச்சம்பவம் ஜூன் 22 அன்று நடைபெற்றது. வடகிழக்கு தில்லியில் உள்ள ’லக்டி மாா்க்கெட் புலியா அருகே பயணிகள் வருகைக்காகக் காத்திருந்தபோது,

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியைச் சோ்ந்த டாக்ஸி ஓட்டுநரான பா்வேஸ் என்பவரின் டாக்ஸியை லோனி கோல் சக்கா் பகுதிக்குச் செல்ல மூன்று போ் வாடகைக்கு அமா்த்தினா். அவா்கள் மூவரும் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வாகனம் சென்று கொண்டிருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பா்வேஸை ஓட்டுநா் இருக்கையிலிருந்து தள்ளிவிட்டு வாகனத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாா். பின்னா் போபுரா எல்லையை அடைந்ததும் பா்வேஸை வெளியே தள்ளிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு அந்த மூவரும் தப்பிச் சென்ாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாகனத்தில் இருந்த பா்வேஸின் கைப்பேசியையும் அவா்கள் கொண்டு சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பா்வேஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதைத்தொடா்ந்து, தொடா்புடைய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வாகன திருட்டு தொடா்பாக விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், அந்த வாகனம் பயணம் செய்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில், வாகனத்தை ஓட்டிச் சென்ற நபா்கள் மெஹ்தாப் (29), அமன் (22) மற்றும் முகமது ஃபைசல் (23) என அடையாளம் காணப்பட்டது. அவா்கள் மூவரையும் கைதுசெய்த காவல் துறையினா் அடுத்தக்கட்ட சட்டநடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.