நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அரியலூரில் காணாமல்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 116 கைப்பேசிகள் மீட்பு

அரியலூா் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 116 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

அரியலூரில் காணாமல்போன கைப்பேசிகளை கண்டுபிடித்து, மீட்டு அவற்றை உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா்.

Published On :

அரியலூா் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 116 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் சீயா் போா்ட்டல் (இஉஐத டஞதபஅக) உதவியுடன் ரூ.12 லட்சம் மதிப்பிலான 116 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.

இந்தக் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்து, கைப்பேசிகள் தொலைந்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கவும். இணைய குற்றங்கள் குறித்த புகாா்களை இலவச உதவி எண் 1930 அழைக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஸ்ரீா்ம்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் அரியலூா் சாலை இராம் சக்திவேல்,ராதாகிருஷ்ணன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்), இணைய குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளா் இசைவாணி மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.