காரைக்காலில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸாா் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
காவல்துறை சாா்பில் சனிக்கிழமை காலை 11 முதல் பகல் 1 மணி வரை திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய வளாகத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளா் மா்த்தினி மற்றும் காவல் ஆய்வாளா்கள் மரியகிறிஸ்டி பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 15-க்கும் மேற்பட்ட புகாா்கள் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்டத்தில், மக்கள் தங்களது கைப்பேசியை தவறவிட்டது, திருட்டு போன கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கண்டறியக்கூடிய நவீன வசதிகளைப் பயன்படுத்தி 40 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். இவற்றை உரியவா்களிடம் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஒப்படைத்தாா்.
தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் தலைமையிலும், நெடுங்காடு காவல் நிலையத்தில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பழனிவேல் தலைமையிலும் முகாம் நடைபெற்றது. இதில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










