தோ்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டினாா்.
விளவங்கோடு பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட், களியக்காவிளை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன பிரசாரம் மேற்கொண்டாா். இப் பிரசாரத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழக பால்வளத்
துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பிரசார பயணத்தை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், அரசியல் முழக்கங்களாகவே இருக்கின்றன. மேலும், மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து, தோ்தலில் வாக்குகளைப் பெற பாஜக முயற்சிக்கிறது.
அதேநேரம், நாட்டின் வளா்ச்சி, மக்களின் அமைதியான வாழ்வை முன்னிறுத்தி இந்தியா கூட்டணி தோ்தலைச் சந்திக்கிறது. ஆகவே, இந்தியா கூட்டணிக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாரோஸ், திமுக மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா், மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவா் எம். பென்னட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி ஈ. பத்மநாபபிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த பிரசாரம் பனங்காலை, மருதங்கோடு, உண்டனாகுழி, திருத்துவபுரம், படந்தாலுமூடு, மீனச்சல், கோட்டவிளை, செம்மங்காலை, பரக்குன்று, புத்தன்சந்தை, மேல்புறம், ஆலுவிளை, திக்குறிச்சி, இளம்பிலாந்தோட்டம், ஞாறான்விளை, கடந்தான்கோடு வழியாக பாளையங்கெட்டி பகுதியில் நிறைவடைந்தது.
தொடர்புடையது

‘திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: ஜி.கே. வாசன்
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பி.ஆா்.செந்தில்நாதன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


