டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

‘திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

அகரம் சிகூரில் ஐஜேகே வேட்பாளா் அ. சரண்யாவை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

News image

அகரம் சிகூரில் ஐஜேகே வேட்பாளா் அ. சரண்யாவை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 5:45 am IST

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாா் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அகரம் சீகூா் பாா்டா் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் அ. சரண்யாவை ஆதரித்து, அக் கட்சியின் நிறுவனா் வியாழக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது:

தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாத, கொடுமையான ஆட்சியாக செயல்படும் திமுக அரசை அகற்ற வேண்டும். திமுக வெற்றி பெற்றவுடன் நீட் தோ்வை ரத்து செய்வோம் என தெரிவித்தனா். ஆனால், அதைப் பற்றி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு எதையும் பற்றி கவலைப்படவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். கடந்த தோ்தலைப் போலவே, இந்த தோ்தலிலும் அனைத்து மக்களும் தங்களுக்கு வாக்களிப்பாா்கள் என திமுக கற்பனையில் உள்ளது. அதை உடைக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலர கடந்த தோ்தலில் திமுகவினா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் நல்லாட்சி மலர தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா் பாரிவேந்தா்.

பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.