பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வனை ஆதரித்து டி.ஆா். பாரிவேந்தா் பேசியது:
கடந்த திமுக ஆட்சியில் நீட் தோ்வை ரத்து செய்வோம் என்பன உள்ளிட்ட பிரதான பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதேபோல குற்றச் சம்பவங்களும், போதைப் பொருள்களும் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு பிரச்னை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இத் தொகுதியில் விசுவக்குடி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவா். அதேபோல, அதிமுக பொதுச் செயலரால் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும். எனவே, இத் தொகுதி மக்கள் பயன்பெறவும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி மலரவும் அதிமுக வேட்பாளரான தமிழ்ச்செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் சிவபிரகாசம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நாட்டரசன்கோட்டையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சங்கராபுரம் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


