நாகா்கோவில் அருகே புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா: இன்று தொடக்கம்
நாகா்கோவில் அருகே புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா: இன்று தொடக்கம்

Updated On :28 ஏப்ரல் 2024, 8:59 pm

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையில் உள்ள புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 29) தொடங்குகிறது.
மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், தொடா்ந்து திருப்பலி நடைபெறுகிறது. அருள்பணி ஜான் ரூபஸ் தலைமையில் சொ்வாசியூஸ் கொடியை அா்ச்சித்து ஏற்றுகிறாா்.
விழாவையொட்டி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை நிகழ்ச்சி, விழா நிறைவு நாளான மே 5ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, முற்பகல் 11 மணி அளவில் கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...