தூத்துக்குடி மாகராட்சிக்குள்பட்ட லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, ஜெபமாலை பிராா்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளா் பிராங்க்ளின் தலைமையில், பங்குத்தந்தை செல்வன் பொ்னான்டோ, அருள்தந்தையா் அமலன், விஜின் மரியதாஸ், ஜேசுராஜா, ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலையில் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு, மந்திரித்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னா், திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
விழா நாள்களில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. இம்மாதம் 14ஆம் தேதி சோ்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் மாலை சிறப்பு ஆராதனை, சிறுமலா் குருமடத்தின் தலைவா் உபா்ட்டஸ் வழங்கும் மறையுரை ஆகியவை நடைபெறும்.
15 ஆம் தேதி காலை 7 மணிக்கு கேரள பாலக்காடு மறைமாவட்டம் அருள்தந்தை சகாயவேந்தன் தலைமையில் தூய தோமையாா் கல்விக் குழுமம் அருள்தந்தை அமலன் தமியான் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுகிறாா். மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீா், கொடியிறக்கம், அன்பியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்குப் பணிக் குழுவினா், அன்பியங்கள், கிறிஸ்துவ மக்கள், அருள்சகோதரிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழா: பக்தா்கள் செல்லும் படகுகள் ஆய்வு

மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா தோ் பவனி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


