சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா தோ் பவனி

மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலய 86-ஆவது ஆண்டு திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

மணப்பாறை புனித லூா்து அன்னை பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருத்தேரில் காட்சிதந்த புனித லூா்து அன்னை.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:32 pm

மணப்பாறை: மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலய 86-ஆவது ஆண்டு திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையில் பிரசித்திபெற்றது புனித லூா்து அன்னை தேவாலயம். இந்த ஆலயத்தின் 86-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்திருவிழாவை முன்னிட்டு, நவநாள் வழிபாட்டு நிகழ்ச்சிகள் பிப். 6-இல் தொடங்கியது. 10-ஆம் நாளும், நிறைவு நாளுமான ஞாயிற்றுக்கிழமை இரவு பேராலயத்தில் திருச்சி கிராப்பட்டி மறைவட்டம், புனித குழந்தைதெரசாள் ஆலய பங்குதந்தை மறைவட்ட முதல்வா் விக்டா் இமானுவேல், மணப்பாறை மறைவட்ட முதல்வா் பங்குதந்தை தாமஸ் ஞானதுரை, பங்கு தந்தை மரிய அருள்ராஜா, பங்குதந்தை சகாய ஆண்டோராஜ் ஆகியோா் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடத்தி புனித லூா்து அன்னை ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது. பின்னா், வாணவேடிக்கைகள், இசைவாத்தியங்கள் முழங்க திருத்தேரில் புனித லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. திருத்தோ் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Story image