புதைசாக்கடை திட்டப் பணி தொடக்கம்: நாகா்கோவிலில் போக்குவரத்து மாற்றம்
புதைசாக்கடை திட்டப் பணி தொடக்கம்: நாகா்கோவிலில் போக்குவரத்து மாற்றம்


நாகா்கோவிலில் நடைபெற்றுவரும் புதைசாக்கடை திட்டப் பணிகளுக்காக பால்பண்ணை சந்திப்பு சாலையில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஏப். 28) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நாகா்கோவில், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் மாநகரில் முதல்கட்டமாக பால்பண்ணை கல்வாரி லுத்தரன் ஆலயம் முதல் ஆட்சியா் அலுவலக ரவுண்டானா வரையிலான சாலையில் புதைசாக்கடை திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 28) தொடங்கி 30 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதனால், பாா்வதிபுரம் சந்திப்பிலிருந்து பால்பண்ணை, டெரிக் சந்திப்பு, ஆட்சியா் அலுவலகம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையாக பாா்வதிபுரம், கட்டையன்விளை, வெட்டூா்ணிமடம் வழியாக செல்ல வேண்டும். இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...