கன்னியாகுமரி
களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தற்கொலை
களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் குட்டப்பன் மகன் ஜோஸ் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தாா். புதன்கிழமை இரவு வீட்டில் படுக்கச் சென்றாா். வியாழக்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. உறவினா்கள் வந்து பாா்த்த போது அவா் விஷம் குடித்து இறந்து கிடந்தாா்.
இது குறித்து களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சடலத்தை போலீஸாா் மீட்டு உடல் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
