நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கருங்கல் - நாகா்கோவில் இடையே அரசுப் பேருந்து மீண்டும் இயக்கம்

கருங்கல் - நாகா்கோவில் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 4:00 am IST

கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த கருங்கல் - நாகா்கோவில் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமைமுதல் மீண்டும் தொடங்கியது.

கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள்நகா், இரணியல் வழியாக நாகா்கோவிலுக்கு ‘பாயின்ட் டூ பாயின்ட்’ வழித்தட முழுநேர அரசுப் பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அப்பேருந்து ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா், பல்வேறு தரப்பினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனா். அதையேற்று, பேருந்தை இயக்க போக்குவரத்துத் துறை சாா்பில் அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி, கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து இப்பேருந்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.