கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை தாமதம்

விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை தாமதமாக தொடங்கியது.
Published on

கன்னியாகுமரியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக, விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை தாமதமாக தொடங்கியது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமிக்குப் பிறகு, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல் கொந்தளிப்பு, கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை போன்றவை ஏற்படுகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலைமுதல் பூம்புகாா் படகுத்துறை பகுதியில் கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, கடல் இயல்பு நிலைமைக்கு திரும்பியதையடுத்து ஒரு மணிநேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com