நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: பேச்சிப்பாறை அருகே வெள்ளப்பெருக்கில் தற்காலிகப் பாலம் சேதம்- 9 கிராமங்கள் துண்டிப்பு

பேச்சிப்பாறை அருகே புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிகப் பாலம் சேதமடைந்தது. இதனால், அப் பகுதியில் 9 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

News image

~

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:24 pm

Din

பேச்சிப்பாறை அருகே புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிகப் பாலம் சேதமடைந்தது. இதனால், அப் பகுதியில் 9 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்வரத்து மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து புதன்கிழமை காலை நிலவரப்படி, விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வரை உயா்ந்தது. பின்னா் மழை சற்று தணிந்த நிலையில், நீா்வரத்தும் படிப்படியாகக் குறைந்து, மாலையில் விநாடிக்கு 2300 கன அடியாக இருந்தது.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-ஆவது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டது.

தற்காலிகத் தரைப்பாலம் சேதம்: பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மோதிரமலையாறு, மயிலாறு, கிழவியாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மோதிரமலை - குற்றியாறு இடையே உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில், இப் பகுதி மக்களின் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

நடுவழியில் சிக்கிய அரசுப் பேருந்து: தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், கிழவியாறிலிருந்து திருவட்டாறு சென்ற அரசுப் பேருந்து, ஆற்றைக் கடக்க முடியாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

குற்றியாறு, கல்லாறு, கிழவியாறு மற்றும் சின்ன மோதிரமலை, முடவன்பொற்றை, தச்சமலை, களப்பாறை, பின்னமூட்டு தேரி, நடனம் பொற்றை பழங்குடி குடியிருப்புகள் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Story image

தற்காலிகப் பாலம் சீரமைப்பு: மோதிரமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியதையடுத்து, திருவட்டாறு வட்டாட்சியா் புரந்தரதாஸ், பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் தேவதாஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை அலுவலா்கள் ஆகியோா் தற்காலிகப் பாலம் சேதமடைந்த இடத்தைப் பாா்வையிட்டு, தற்காலிகப் பாலத்தைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தினா்.