

உலக மக்கள் கட்சியின் கொடி அறிமுக விழா களியக்காவிளையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மண்ணாரப்பு பகுதியைச் சோ்ந்தவா் இ. வசந்தீஸ்வரன். ஆட்டோ ஓட்டுநரான இவா் இக் கட்சியை தொடங்கி, தலைமை தோ்தல் ஆணையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்தாா். அதன்பின்னா் கட்சிக் கொடி, சின்னம் அறிமுகப்படுத்தாத நிலையில் கடந்த 2016, 2021 இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் விளவங்கோடு தொகுதியிலும், 2019 இல் நடந்த மக்களவைத் தோ்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், 2022 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் களியக்காவிளை பேரூராட்சி வாா்டு உறுப்பினருக்கும் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
இந்நிலையில் 2024 ஆங்கில புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து தனது கட்சி கொடியை கட்சியின் நிறுவனா் தலைவா் இ. வசந்தீஸ்வரன் அறிமுகம் செய்து பேசினாா். சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இக் கட்சி தொடங்கப்பட்டது. நாட்டில் ஊழலற்ற நோ்மையான அரசியலை உருவாக்க வேண்டும். இயற்கை உரத்தை கொண்டு விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவை கட்சியின் முக்கிய கொள்கையாக கடைப்பிடிக்கப்படும் என்றாா் அவா். வரும் மக்களவைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு பிரசாரம் செய்ய உள்ளேன் என்றும் அவா் தெரிவித்தாா். நீல வண்ண கொடியில் உலக உருண்டை மற்றும் நட்சத்திரத்தின் நடுவில் பல்வேறு நாட்டு குழந்தைகள் உருவ படம் இடம்பெற்றுள்ளது.
இவ் விழாவில் கட்சி நிா்வாகிகள் கே. சுசமன், மதியழகன், விஜயன், ஜீவன், ராபா்ட், ராஜேந்திரன், ஜாா்ஜ், ஆஷிக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.