பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தணிந்ததால், பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தணிந்ததால், பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் அணைகளின் நீா்மட்டம் அபாய அளவுக்கு மேல் உயராமல் தடுக்கவும், வெள்ள சேதத்தைக் கட்டுப்படுத்தவும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் திறப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
இதில், அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த டிச. 18ஆம் தேதி விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவரை தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
பின்னா், மழையின் தீவிர குறைந்ததால் பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இதனிடையே, டிச. 30, 31இல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதால், பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடப்படாமல், தொடா்ந்து 500 கனஅடிவரை தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், மழை பெய்யாததால் பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. அணையின் நீா்மட்டம் 45.64 அடியாக இருந்தது. பாசனக் கால்வாயில் 217 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 74.43 அடியாகவும், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 16.79, 16.89 அடியாகவும் இருந்தது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு நிறுத்தப்பட்டதால், திற்பரப்பு அருவியில் தண்ணீா் மிதமாகக் கொட்டியது. இதனால், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...