‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

குமரி மாவட்டத்தில் ரூ.1.34 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

குமரி மாவட்டத்தில் ரூ.1.34 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்களை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா்.

தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றுகிறாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, கிள்ளியூா் வட்டத்தில் ரூ. 1 கோடியே 33 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி கூடுதல் கட்டடங்களை தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள புதிய வகுப்பறை கட்டடத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசினாா்.

அவா் பேசியதாவது:

தமிழக அரசின் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ.70.15 லட்சத்தில் தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் மேற்கூரையுடன் கூடிய கூடுதலாக 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வள்ளியவிளை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.63.67 லட்சத்தில் மேற்கூரையுடன் கூடிய கூடுதலாக 4 வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா், மாணவிகள் உயா்நிலை மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு செல்லும்போது ஆங்கில மொழி தடையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்று கொடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடா்ந்து நிகழாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட குப்பையில்லா குமரி திட்டம் 60 சதவீதம் இலக்கை அடைந்துள்ளது. டிசம்பா் மாதத்துக்குள் 100 சதவீதம் இலக்கை அடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா்அருள் சோபன், தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அருள் ஆன்றனி, கல்குளம் வட்டாட்சியா் முருகன், தக்கலை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமலதா, கோதநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கிறிஸ்டல் பிரேமகுமாரி, வட்டார கல்வி அலுவலா் காா்த்திகேயன் நாயா், தலைமை ஆசிரியை ஹெலன் மேரி மற்றும் நகராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.