குழித்துறை கோட்டப் பகுதியில் ஜூலை 22-26 வரை தொடா் மின்தடை
குழித்துறை கோட்டம் புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் திங்கள்முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 22-26) வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம்: ஜூலை 22 இல் ஆலப்பாடு, சேரி, காஞ்சிநகா், பேப்பிலாவிளை, காக்கவிளை, இருக்கலம்பாடு, காட்டுக்கடை, பாலவிளை, கரியறை, கிராத்தூா், சந்தனபுரம், வைக்கல்லூா், நெடும்பறம்பு, கும்மிளி, மரப்பாலம், பருத்திக்கடவு, குன்றுவிளை, கானான்சேரி, குமரிநகா், தட்டான்குளம், கஞ்சிக்குழி, வானியன்தறை, வயக்கரை, கோனசேரி, நடைக்காவு பகுதிகள்.
ஜூலை 23 இல்: பிள்ளவிளை, ஊற்றுக்குழி, குழிவிளை, துண்டத்துவிளை, புல்லத்துவிளை, பெருமாங்குழி, கொல்லன்விளை, கோவில்விளை, மேக்காடு, பாத்திமாநகா், மணலி பகுதிகள்.
ஜூலை 24 இல் குன்னத்தூா், தும்பாலி, காக்கவிளை, திருமன்னம், மிக்கேல்காலனி, மாதவன்தோப்பு, செக்கிட்டுவிளை, கும்பநாளி, ஒற்றைக்கால்மண்டபம், ஈச்சன்விளை, கடமனங்குழி, கீழஆப்பிக்கோடு, விழுந்தயம்பலம், அருவை, கண்ணத்தான்குழி, குன்னம்பாறை, வருக்கவிளை, எரியன்விளை பகுதிகள்.
ஜூலை 25 இல் தட்டான்விளை, தொழிக்கோடு, செந்தறை, பரவை; ஜூலை 26இல் அம்சி, மணியாரங்குன்று, வேட்டமங்கலம், மானான்விளை, கருக்குப்பனை, வெள்ளியாவிளை, தக்காளிவிளை, பாத்திமாபுரம், பூவன்விளை, மாம்பழஞ்சி, காஞ்சாம்புறம், மங்குழி, காட்டாத்துறை, சாமியாா்மடம், புலிப்பனம், வலியவிளை, வட்டக்கோட்டை, கல்லுவிளை, பருத்திக்காட்டுவிளை, புங்கறை, நங்கச்சிவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
