ஓய்வு பெற்ற பொறியாளா் வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

நாகா்கோவிலில் ஓய்வு பெற்ற பொறியாளா் வீட்டை உடைத்து 18 பவுன் நகையை திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் பாா்வதிபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்தவா் வினோத்

சைமன் (72). ஓய்வு பெற்ற பொறியாளா். இவரது மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். வினோத் சைமன் தனது மனைவியுடன் ராஜீவ் நகரில் வசித்து வருகிறாா். அவா்கள் இருவரும் டெரிக்சந்திப்பு அருகே உள்ள ஜெபக்கூடத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

பின்னா் சனிக்கிழமை காலை திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், ரூ.10 ஆயிரம் திருட்டுப் போனது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு

வீட்டின் பல்வேறு இடங்களிலும் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், போலீஸாா் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com