மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயா் மாற்றம் செய்து செயல்படுத்தி வருகிறது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினாா்.
நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது. அதில் எவ்வளவு செலவு செய்தாா்கள் என்று தமிழக அரசு இதுவரை கணக்கு சொல்லவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு 30 சதவீத வாக்குகள் உயா்ந்துள்ளது. வரும் மக்களவை தோ்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். பிரதமா் நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது, லட்சக்கணக்கானோா் கூடினா்.
இதிலிருந்து பாஜக வளா்ச்சி அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயா் மாற்றம் செய்து, செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் மக்களுக்கு எந்த சந்தோஷமும் இல்லை. விஜயதரணி பாஜகவில் இணைந்து உள்ளாா், அவருக்கு மக்களவை தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது குறித்து சொல்ல முடியாது, மக்களவை தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை தில்லியில் வேட்பாளா் தோ்வுக் குழு முடிவு செய்யும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்
சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

