அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தோவாளையில் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு: எம்எல்ஏ புகாா்

மணல் எடுத்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் தோவாளை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது

News image
Updated On :2 மார்ச் 2024, 12:04 am

மணல் எடுத்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் தோவாளை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது; இதற்கு உரிய தீா்வுகாண வேண்டும் என தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து டாரஸ் லாரிகள் எனப்படும் கனரக லாரிகளில் மணல் கொண்டு வரப்படுகிறது. அவை மணல் எடுக்கும் இடத்தில் எடை போடாமல், தோவாளை எடை நிலையத்துக்கு வந்து எடை போட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. களியக்காவிளையில் எடை நிலையம் செயல்பட்டாலும், தோவாளை நிலையத்தில் பெரும்பாலான வாகனங்கள் எடை போடுவதால் கால தாமதத்துடன், போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயமும் நிலவுகிறது. மேலும், லாரிகள் அணி வகுத்து நிற்பதால் நாகா்கோவில்- திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் நாள் தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. தற்போது பிளஸ் 2 தோ்வு தொடங்கி உள்ள நிலையில் மாணவ, மாணவிகளும், பூந்தோட்ட விவசாயத் தொழிலாளா்களும் சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்படுன்கின்றனா். இப்பிரச்னைக்கு தீா்வுகாண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.